அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான ஓவியப் பயிற்சியே இந்தப் பயிற்சியாகும். இந்தப் பயிற்சியின் பெயர் Freehand Outline And Model Drawing - Higher Grade என்பதாகும். இது அரசுத் தேர்வுக்குரியது.
இந்தத் தேர்வு தமிழ்நாடு அரசு (தொழில் நுட்பத்) தேர்வுத் துறையால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. கீழ்நிலை, மேல்நிலை (Lower - Higher) என உள்ளது. மேல்நிலை (Higher grade) தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஓவிய ஆசிரியராக முடியும்.
எங்கள் பயிற்சிகளில் முதன்மையான இடத்தை வகிப்பது ஓவிய ஆசிரியர் பயிற்சிதான். ஏன் தெரியுமா? இன்று அரசு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஒரு டைப்பிஸ்ட் தேவை என்றால் ஓராயிரம் டைப்பிஸ்ட்டுகள் போட்டி போடுகிறார்கள்.
ஆனால் ஓவியத் துறையில், ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. போட்டி குறைவாக உள்ளதால் வேலை வாய்ப்பு எளிதாகிறது. அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இடைநிலை ஆசிரியருக்குச் சமமான ஊதிய விகிதம். ( அடிப்படைச் சம்பளம் ரூ.6050+4300/- இதர படிகளாடு சேர்த்து ரூ. 13,000/- வரை மாதச் சம்பளம் ).
எனவே பலரும் இதில் விரும்பிச் சேருகின்றனர். எங்களின் பாடங்களின் சிறப்பை ஏற்கனவே எங்களிடம் பயின்ற மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
வேலை வாய்ப்பு
நாளக்கே வேலை கிடைத்துவிடும், என்று நாங்கள் சொல்லவில்லை. பயிற்சியை முடித்தவுடன் அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தவிர, 35 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழகம் முழுவதும் தனியாரால் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகள் அனைத்திலும் ஓவியப் பாடம் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் வேலை கிடைக்கும் வரை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உடனடியாக வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வெகு விரைவிலேயே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், நடுநிலைப் பள்ளிகளிலும் ஓவியப் பாடத்திட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்காலத்தில் ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி
இந்தப் பயிற்சிக்கான குறைந் பட்ச கல்வித் தகுதி S.S.L.C. தேர்ச்சி. பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் படித்து S.S.L.C. பொதுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாதவர்களும் இப்பயிற்சியில் சேரலாம். மதிப்பெண் பற்றி கவலை இல்லை.
S.S.L.C. படித்தவர்கள்தான் இதில் சேரவேண்டும் என்பதில்லை. +2 படித்தவர்களும் ணூ.வீ.ணூ முடித்தவர்களும், பட்டதாரிகளும் கூட சேரலாம். ஏனெனில் காத்திருக்கும் வேலை வாய்ப்பை கைப்பற்றுவது தானே புத்திசாலித்தனம். வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது.
அஞ்சல் வழியில் கற்றுக் கொள்ள முடியுமா?
தபால் மூலமாகப் படித்து, ஓவியக் கலையைக் கற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை. நிச்சயமாக கற்றுக் கொள்ள முடியும். கொஞ்சம் ஆர்வமும் முயற்சியும் தான் இதற்குத் தேவை. எங்கள் எளிமையான பாடங்கள் உங்களுக்கு ஆர்வமூட்டும். உங்கள் முயற்சி வெற்றியை வழங்கும்.
அரசுத் தேர்வுகள்
அரசுத் தேர்வுகள் பற்றிய விளக்கமும் விண்ணப்ப படிவமும் நாங்கள வழங்குவோம். எவ்வித சிக்கலும் இன்றி நீங்கள் தேர்வு எழுத வழிகாட்டப்படும். தேர்வுக்குப் பணம் கட்ட கடைசி நாள் ஆகஸ்ட் 31. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தில் தேர்வுகள் நடக்கும். இது குறித்து விவரங்கள் விளக்கமாக பாடங்களாடு அனுப்பப்படும்.
நாங்கள் நேர்முக வகுப்புகளும் நடத்துகிறோம். அஞ்சலில் பயில்வோரும் விரும்பினால் நேர்முக வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதற்கென சிறப்பு வகுப்புகள் நவம்பரில் பத்து நாட்கள் நடக்கும். இதற்குத் தனிக் கட்டணம் ரூ. 200/. இவ்வகுப்புகள் பயனுள்ளவை. தேர்வு பற்றிய நுணுக்கமான அறிவைப் பெறலாம். வெற்றிக்குப் பெரிதும் உதவும். இது குறித்த விவரங்கள அக்டோபர் மாதம் அனுப்பி வைப்போம். கடந்த ஆண்டுகளில் சிறப்பு நேர்முக வகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ( நூறு சதவீதம்) வெற்றி பெற்றுள்ளனர் என்பதைப் பெருமையுடன் தெரிவிக்கிறோம்.
தனிக்கவனம்
பணம் வந்து சேர்ந்ததும், ஆளுக்கொரு பார்சலை அனுப்பிவிட்டு கடமை முடிந்தது என்று நாங்கள் கருதுவதில்லை. கற்போரின் திறமைக்கேற்ப பாடங்கள் அனுப்பப்படும். ஒவ்வொருவரையும், தனித்தனியே கவனிக்கிறோம். மாணவர்கள் வரைந்தனுப்பும் படங்களத் திருத்தம் செய்து, விரிவான குறிப்புகள் எழுதி, மாதிரி படங்களும் போட்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களின் வெற்றியே எங்கள் குறிக்கோள். எனவே தான் பணத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையோடு தான் மாணவர்களச் சேர்த்துக் கொள்கிறோம். நீங்கள் விரைவில் சேர்வது நல்லது. இல்லாவிட்டால் இவ்வாண்டு பயிற்சியில் சேரமுடியாமல் போய்விடும்.
பயிற்சி கட்டணம்
ஓவிய ஆசிரியர் பயிற்சி (FreeHand Outline and Model Drawing) க்கு உரிய மொத்த கட்டணம் ரூ. 6000/.
பாடம் அனுப்பும் முறை
பாடங்கள் எங்கள் முறைப்படிகள்தான் அனுப்பப்படும். நீங்கள் செலுத்தும் பயிற்சிக் கட்டணத்திற்கு ஏற்பவும், நீங்கள் பயிற்சியில் சேர்ந்த காலத்தை ஒட்டியும் பாடங்கள் படிப்படியாக அனுப்பப்படும். பயிற்சிக் கட்டணத்தை மொத்தமாக செலுத்தியிருந்தாலும், எல்லாப் பாடங்களயும் மொத்தமாக ஒரே சமயத்தில் அனுப்புவதற்கில்லை.
நேர்முகப் பயிற்சி
நேர்முகப் பயிற்சி பெற விரும்புவோர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இது குறித்த விவரங்களக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேர்முக பயிற்சிக்கும் அதே கட்டணம் தான்.